நடிகர் முரளி மரணம்-மாரடைப்பால் உயிர் பிரிந்தது

பிரபல நடிகர் முரளி மாரடைப்பால் இன்று அதிகாலை திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 46. சென்னை வளசரவாக்கம் இந்திரா நகரில் நடிகர் முரளி வீடு உள்ளது. மனைவி ஷோபா. காவியா என்ற மகளும் ஆதர்வா, ஆகாஷ் என்ற மகன்களும் உள்ளனர். வழக்கமாக அதிகாலையில் எழுந்துவிடும் பழக்கம் உடையவர் முரளி. இன்று காலை 5 மணிக்கு அவரை மனைவி ஷோபா எழுப்பியபோது, அசைவற்று கிடந்தார். அதிர்ச்சியடைந்த ஷோபா, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதித்து பார்த்த டாக்டர், ஒரு மணி நேரம் முன்பே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து முரளியின் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரைப்பட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை இறுதிச் சடங்கு நடக்கிறது. பிரபல கன்னட இயக்குனர் சித்தலிங்கய்யாவின் மகன் முரளி. பல ஹிட் படங்களை தந்தவர் சித்தலிங¢கய்யா. 1980&களில் சில கன்னட படங்களில் முரளி நடித்தார். 1984&ல் பாலசந்தர் தயாரிப்பில் அமீர்ஜான் இயக்கிய Ôபூவிலங¢குÕ படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். அடுத்து மணிரத்னம் இயக்கிய Ôபகல் நிலவுÕ படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் பெற்ற வெற்றிகளால் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து Ôதங்கமணி ரங்கமணிÕ, Ôபுது வசந்தம்Õ, Ôபாலம்Õ, Ôநானும் இந்த ஊருதான்Õ, Ôபுதிய காற்றுÕ, Ôமண்ணுக்குள் வைரம்’, Ôஎன் ஆசை ராசாவேÕ, Ôநம்ம ஊரு பூவாத்தாÕ, Ôஇதயம்Õ, Ôஎன் ஆசை மச்சான்Õ, Ôவெற்றிக்கொடி கட்டுÕ, Ôபொற்காலம்Õ என ஏராளமான தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார். தமிழ், கன்னட மொழிகளில் 80&க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தனது மகன் ஆதர்வா ஹீரோவாக அறிமுகமான Ôபாணா காத்தாடிÕ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். நடிகர்கள் சிவாஜி கணேசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், சூர்யா, சரத்குமார், மம்மூட்டி ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறார்.

Ôஇதயம்Õ படத்தில் கல்லூரி மாணவராக முரளி நடித்தார். அதில் அவரது கேரக்டர் பிரபலமானது. இதைத் தொடர்ந்து பல படங்களில் கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார் முரளி. அப்பாவித்தனமான முகம், மென்மையாக பேசும் குணம் ஆகியவற்றால் ரொமான்டிக் ஹீரோ என்ற இமேஜுடன் திரையுலகில் வலம் வந்தார். 2001&ம் ஆண்டு கலைமாமணி விருது பெற்ற இவர், தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை இரு முறை வாங்கியுள்ளார். சின¤மாவில் அறிமுகமானபோது, கன்னட நடிகை ஷோபாவை காதலித்தார். இந்த காதலை முரளியின் குடும்பத¢தார் ஏற்கவில்லை. எதிர்ப்பை மீறி ஷோபாவை திருமணம் செய்தார். பின்னர் அவர்களை இரு குடும்பத்தாரும் ஏற்றுக்கொண்டனர். அவரது மகன் அதர்வாவை சமீபத்தில் ஹீரோவாக்கி அழகு பார்த்தார் முரளி. அவர் ஹீராவோக நடித்த முதல் படமான பாணா காத்தாடியில் முரளியும் சிறிய ரோலில் நடித்திருந்தார். மகன் நடித்த முதல் படமே முரளியின் கடைசிப் படமாக அமைந்தது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முரளிக்கு வயது 47 ஆகிறது. முரளியின் திருமணம் காதல் திருமணமாகும். அவரது மனைவி பெயர் ஷோபா.

முரளியின் மறைவு செய்தி கேட்டு தமிழ் திரைப்பட உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. முரளியின் மறைவிற்கு தமிழ் முன்னணி நடிகர்களும், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.


0 comments to "நடிகர் முரளி மரணம்-மாரடைப்பால் உயிர் பிரிந்தது"

Post a Comment

My Blogs

Blog Archive

Followers

Web hosting for webmasters